உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக........

Monday 30 August 2010

தூக்கத்தை துரத்தும் துயரம்

இன்று யாரைக்கேட்டாலும் மனசு சரி இல்லை,சரியா தூக்கம் வர
வில்லை என்று சொல்வது இயல்பாகிவிட்டது. சிலரை பார்த்தால்
எந்நேரமும் முகத்தை உம்ம்மென்று...கவலையாக வைத்துக்கொண்டு
விட்டத்தையே பார்த்துக்கொண்டு இருப்பார்கள். என்னவென்று கேட்டால்
குடும்ப கஷ்டம் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும், அம்மாவிற்கு
ஆப்ரேஷன்  பண்ணனும் என்று ஏதாவது சொல்வார்கள் (ஆனால்
அதற்கான வழியை தேடமாட்டார்கள்)

இன்னும் சிலர் எல்லா வசதிகளும் இருக்கும் ஆனால் அவர்களுக்கு
உடலில் எதாவது சிறிய நோய் வந்துவிட்டால் கூட உடனே மரணபயம்
வந்துவிடும் இரவெல்லாம் தூங்கமாட்டார்கள். டெண்சனாகவே
இருப்பார்கள்.
இப்படிதான் நான் வேலைபார்க்கும் இடத்தில் ஒரு  நண்பர் இருந்தார்
அவர் ஒரு நாள் "சும்மா இருந்தவன் சொரிந்து கெட்ட  கதையாக!" கம்பெனி கிளினிக்கிற்கு சென்று கொலஸ்ட்ரால் சோதனை செய்துக்
கொண்டார். அந்த சோதனையில் அவருக்கு  HDL என்னும் கொலஸ்ட்ரால்
கொஞ்சம் அதிகமாக இருப்பதாக தெரிந்தது. அதற்கு  டாக்டர் கொஞ்சம்
அசைவ உணவை கட்டுப்படுத்த சொன்னார். அன்றில் இருந்து
அசைவத்தை விட்டுவிட்டார் வெறும் சைவஉணவு மட்டுமே  சாப்பிட்டார். சிலநாள்களுக்கு பின் மீண்டும் கொலஸ்ட்ரால் சோதனை செய்தார். அதில்
நல்ல கொலஸ்ட்ராலும் குறைந்துவிட்டது என்று  சொல்லிவிட்டார்கள்.
அன்று முதல் அவருடைய இரவு தூக்கம் போய்விட்டது. ஏதேதோ எண்ண  தொடங்கிவிட்டார் ஒரு வகையான பயம் அவருக்கு
வந்துவிட்டது. இரேவெல்லாம் தூக்கம் வருவதில்லை என்று
சொல்லுவார்.



ஒரு நாள் திடீர்ரென்று இரவு நெஞ்சிவலிப்பதாக போன் பண்ணுகிறார்.
நண்பர்கள் அவரை   ஹாஸ்பிடலுக்கு கூட்டிசென்று  ECG சோதனை
செய்துபார்த்தால்  எல்லாம் நார்மலாக இருக்கிறது என்று டாக்டர் 
சொல்லி அனுப்பிவிட்டார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி இல்லை,
அடுத்தநாள் வேறொரு மருத்துவமனைக்கு செல்வோம் என்று
கூப்பிடுகிறார், அதுபோல் இன்னொரு மருத்துவமனைக்கும் சென்று
சோதனைசெய்து   பார்த்தால் எல்லாம் நார்மலாகத்தான் இருக்கிறது
என்று சொல்லுகிறார்கள், அப்பொழுதும் அவர் நம்பிக்கை கொள்ள
வில்லை. மீண்டும் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் கஷ்டப்
படுவதாக கூறுவார். இது போலவே இரண்டு மூன்றுமுறை செய்தார்.
அடுத்து கொஞ்ச நாள்களுக்கு பின் இரவில் தூங்கும்போது திடீர்ரென்று
மூச்சி விட முடியாமல் திணறுவதாக சொல்ல ஆரம்பித்தார்.
ஒருநாள் அதிகமாக மூச்சி திணறுவதாக சொன்னதால் அவரை
ஹாஸ்பிடலில் சேர்த்தோம்.ECG  எடுத்தார்கள், இரவு முழுவதும்
அப்ஜர்வேசன் செய்தார்கள். பிறகு ஒன்றும் இல்லை உங்களுக்கு வெறும் 
மனபிரம்மை என்றுசொல்லி வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.
இத்தனைக்கு பிறகும் அவரின் மனசு திருந்துவதாக இல்லை மீண்டும்
பழைய பல்லவியையே பாடினார்.



அடுத்து அவரை ஒரு மனநிலைமருத்துவரிடம் கூட்டி சென்றோம். அந்த 
மருத்துவர் இது வெறும் பயம் தான் என்றார். அவர் அவருக்கு சில
பயிற்சியும், சில மாத்திரைகளையும் கொடுத்து இதை தொடந்து சாப்பிட
சொன்னார். ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது என்று பார்த்தால்.
திரும்பியும் ஆரம்பித்துவிட்டார். என்னவென்று கேட்டால் மனநிலை
மருத்துவர் கொடுத்த மாத்திரையை சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்
என்று சொல்லுகிறார். ஏன் என்றால் அது பழக்கமாகிவிடும்என்று
சொல்லுகிறார். இதற்குமேல் இவர் இங்கு  இருந்தால் சரிபட்டுவராது
என்று கொஞ்சநாள் ஊருக்கு போய்வாருங்கள் என்று அனுப்பிவைத்து
விட்டோம்.

ஊரில் குடும்பத்துடன் இருந்துவிட்டு கொஞ்சம் பரவாயில்லை என்று.
திரும்பவும்  விடுமுறை முடிந்துவந்தார். பிறகும் அவர் செயலில் மாற்றம்
இல்லை.(அவர் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தவர்
OIL and GAS செக்டாரில் சம்பளத்தில் குறை இருக்காது என்பது
அனைவருக்கும் தெரிந்ததே) அனைத்தையும் விட்டுவிட்டு அடுத்த
ஒரேவாரத்தில் வேலையை ரிசைன் செய்துவிட்டு சென்றுவிட்டார்.
இத்தனைக்கும் அவர்   பத்துவருட கல்ப் அனுபவம் உள்ளவர்.
இப்பொழுதும் ஊரில் இருக்கிறார்.

இதேபோல் இன்னொரு நண்பர் அவருக்கு இந்தளவு பாதிப்பு இல்லை
என்றாலும் அவரும் இதே மரண பயம் உள்ளவர் தான். இவருக்கு
சாதரணமாக  பிரஷ்சர் சோதனை செய்யப்போனாலும் இவருடைய பயத்தால்  நார்மலாக இருந்தவரின் பிரஷ்சர் அதிகமாகிவிடும். இப்படி
தான் ஒரு நாள் வருடம் ஒரு முறை செய்யப்படும் உடல் சோதனையில்
இவருக்கு பிரஷ்சர் அதிகமாக இருந்ததால் இவரை மருத்துவர் அட்மிட்
ஆக சொல்லிவிட்டார். பிறகு இவருடைய கதையை மருத்துவரிடம்
சொன்னபிறகு புரிந்து கொண்டு அவரை ரிலக்ஸ் ஆகுமாறு செய்து
பிறகு பிரஷ்சர் சோதனை செய்யப்பட்டதும் நார்மலாக இருந்தது.
இதுபோன்றவர்கள் எல்லாம் ஏன் தங்கள்  மனசை கட்டு படுத்துவதில்லை
என்று தெரியவில்லை. இவர்களுக்கு நமக்கு தெரிந்த மனசை கட்டுபடுத்தும் முறைகளை சொன்னாலும் அவர்கள் அதை ஒழுங்காக பின்பற்றுவதில்லை.
யோகா,தியானம் போன்றவைகளையும் சரியாக தொடர்ந்து செய்வது
கிடையாது. இதுவே இவர்களுடைய இத்தனை பாதிப்பிற்கு காரணம். 

இதுபோன்றவர்களை இந்த பாதிப்பில் இருந்து விடுவிக்க எனக்கு தெரிந்த
சில யோசனைகளை அடுத்தடுத்த பதிப்புகளில் கூறலாம் என்று
எண்ணுகிறேன்.
 

9 comments:

ஸாதிகா said...

நல்ல பதிவு.தொடருங்கள்.

Unknown said...

நல்லாயிருக்கு.. தொடர்ந்து எழுதுங்க..

பொடுசு said...

உண்மை என்னன்னா... நம்மில் பலருக்கு உடம்பையும் ஆரோக்கியமா வச்சிக்க தெரியல! மனசையும் ஆரோக்கியமா வச்சிக்க தெரியல!!

சிலர் எப்போதும் கவலையுடன் இருக்கும் மனநிலையை விரும்பி ரசிக்க தொடங்கிவிடுகின்றனர்.நாளாக நாளாக இந்த மனநிலை பழகிவிடுவதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தானாக முன்வந்து தீர்வு காண முயல்வதில்லை.

எல்லா வித மன நோய்க்கும் எனக்கு தெரிந்த ஒரே சிறந்த மருந்து "சிரிப்பு". இன்னொரு மருந்து சொல்லலாம்............ வேணாம் விடுங்க அது என்னோட மன "பிராந்தி"

மனமிருந்தால் மார்கபந்து இல்ல இல்ல மார்கமுண்டு, என்பது போல அவர்களாகவே இப்பிரச்சனயை விட்டு வெளியே வர முயற்சிக்காத வரை நம் முயற்சிகள் விழலுக்கு இரைத்த நீரே!

Unknown said...

நல்ல subject. நல்ல பதிப்பு. வாழ்த்துக்கள். தொடரட்டும் பணி.
(அப்டினா....நல்லார்க்கு மேட்டரு, பெஸ்ட் ஆப் லக்கு. வியாவாரம் பிச்சிகுனு போவும்னு அர்த்தம் கண்ணு)

Abdulcader said...

சகோதரி ஸாதிகா !!

உங்கள் வருகைக்கு நன்றி.

Abdulcader said...

பாபு
உங்கள் வருகைக்கு நன்றி.

Abdulcader said...

@பொடுசு....

//எல்லா வித மன நோய்க்கும் எனக்கு தெரிந்த ஒரே சிறந்த மருந்து "சிரிப்பு". இன்னொரு மருந்து சொல்லலாம்............ வேணாம் விடுங்க அது என்னோட மன "பிராந்தி"//

முதல் வகை சரிதான்,ஆனா இரண்டாவதுவகை மனநோயிக்கு மருந்தா இருப்பதா உங்களுக்கு தோன்றினாலும் அது மற்ற எல்லா நோயுக்கும் காரணி. நன்றி !!

Abdulcader said...

@ ஹரி....

வருகைக்கு நன்றி (அப்படின்னா தேங்க்ஸ்இன்னு அர்த்தம்)

Unknown said...

அருமை

Post a Comment

எதாவது பார்த்து போட்டுட்டு போங்க.

Related Posts with Thumbnails