உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக........

Tuesday, 17 August 2010

வளைகுடா நாடுகளும் ரமலானும்

அரபு நாடுகளை பொறுத்தவரை ரமலான் என்பது ஒரு மகிழ்ச்சி தரும்
மாதமாக இருக்கிறது.அது அந்த நாட்டவர்களானாலும்  சரி,
வெளிநாட்டவர்களுக்கும் சரி......ரமலான் பிறந்து விட்டால் மகிழ்ச்சிதான்.

அம்மாதத்தில்  நகரங்கள் எல்லாம் அழகு படுத்த படுகிறது,கடைகளில்
எல்லாம் விலை சலுகை (Offers)அறிவிக்கப்படுகிறது.செல்பேசிகள் கட்டண
சலுகை கொடுக்கப்படுகிறது. வேலை நேரங்கள் எட்டு  மணி நேரத்தில்
இருந்து ஆறு மணி  நேரமாக குறைக்கப்படுகிறது.நோன்பு திறப்பதற்காக
பல நிறுவங்கள் உணவு பலகாரங்களை தங்களிடம் வேலை
செய்பவர்களுக்கு விநியோகிக்கின்றன

       ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்

மேலும் இம்மாதத்தில் இங்கு இரவு பகலாகவும்,பகல் இரவாகவும்
காட்சியளிக்கிறது. அது எப்படி என்றால் காலை நேரங்களில்
கடைகள் பெரும்பாலும் திறப்பதில்லை நோன்பு திறந்ததிலிருந்து
துவங்கி இரவில் அதிகமான நேரம் வரை திறந்துவைக்கின்றனர்.
அந்நேரங்களில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாக
காட்சியளிக்கின்றனர்.
                                                                           இப்தார் கூடாரம்
இதையெல்லாம் விட சிறப்பம்சம் என்னவேன்ன்றால் ரமலான்
வந்துவிட்டால் அந்நாட்டு அரசோ அல்லது சில தனியார்நிறுவங்களோ
ஒன்றிணைத்து நோன்பு திறப்பதற்காக கூடாரம் (Ifthaar tent)
அமைகின்றனர்.அதில் நோன்பு திறக்கும் நேரத்தில் பேரிச்சம்பழம்,மற்ற
பழவகைகள்.குளிர்பானங்கள்,தண்ணீர் பாட்டில்கள் போன்றவை
விநியோகிக்கப்படுகின்றது மேலும் அரபு உணவுகளும் (கப்ஷா,மஜ்பூஸ்)
பெரிய பெரிய தாம்பூலத்தில்வைத்து வியோகிக்கப்படுகிறது.
                                                                                     இப்தார்
                    கப்ஸா எனும் அரேபியா உணவு   
ஒவ்வொரு தாம்பூலத்திலும்  ஐந்து அல்லது ஆறு பேர்கள் இருந்து உணவு
அறுந்தவைக்கப்படுகின்றனர்.இவ்வாறு அது தனியார் நிறுவன கூடாரமாக
இருந்தால் ஒவ்வொரு அரபு குடும்பம்களும் அவர்களுடைய தகுதிக்கேற்ப
ஒருநாளோ இரண்டு நாள்களோ செலவிடுகின்றனர்.

ஈத் தொழுகை
ஈத் எனும் பெருநாள் வந்துவிட்டால் நகரங்கள் அனைத்தும் லைட்டுகளால்
அலங்கரிக்கபடுகின்றது,நகரமே கோலாகாலப்படுகிறது.மேலும்
ஈத்திற்காக 5 அல்லது 6  நாள்கள் விடுமுறை விடப்பட்டுகின்றது.
இந்த விடுமுறையில்தான் என்னைபோன்றவர்கள் நண்பர்களையோ,
உறவினர்களையோ காணபடையெடுப்பது உண்டு  எனவே அந்நேரம்
டேக்சியும் பஸ்சும் கிடைக்காமல் மக்கள் அல்லோலப்படுவதுண்டு.
இவ்வாறு வளைகுடாவின் ரமலான் மாதத்தை பற்றி சொல்லிக்கொண்டே
போகலாம்..............

என் அனுபவத்துளிகள்........

நான் சவுதியில் இருந்தபோது ஒரு நாள் கம்பெனி வேலையாக
அல்கோபர் நகரத்திற்கு நானும் என்னுடன் சேர்ந்த சில நண்பர்களும்
காரில் சென்று கொண்டுருந்தோம்.நோன்பு திறக்கும் நேரம் மிக நெருங்கி விட்டது என்ன செய்வது என்று தெரியவில்லை வண்டியை நிறுத்தி
கடைகளுக்கும் செல்லவும் வழி இல்லை கடைகள் எல்லாம் மூடி
இருக்கின்றன,பின்பு வண்டி ஒரு சிக்னலில் நின்றது என்ன ஒரு
ஆச்சரியம் திடீர்ரென்று தோன்றிய ஒரு அரபி மற்றும் அவருடைய 
மகன்களும் ரெடியாக கையில் வைத்திருந்த நோன்பு திறப்பதற்கான
தண்ணீர்,பேரிச்சம்பழம்,இன்னும் கேக்குவகைகள் எல்லாவற்றையும்
ஒவ்வொரு கவரிலும் வைத்து அந்த சிக்னலில் நிற்கும் அனைத்து
வண்டிகளுக்கும் கொடுத்துக்கொண்டு இருந்தனர்.நல்லவேளை அவை
எங்களுக்கும் கிடைத்தது.எனவே எந்த கஷ்டம் இன்றி நோன்பு திறக்க
முடிந்தது.இந்த நிகழ்ச்சி மூலம் அவர்களின்  கொடைபண்பு விருந்தோம்பல்
பண்பு விளங்கியது.
 _____________________________________________________________
ரமலான் வந்துவிட்டால் அரபு சிறுவர்களின் சேட்டைகள் தாங்கமுடியாது.
இரவு தொழுகையுக்கு வந்து மஸ்ஜித் உள்ளேயே கோஷ்டி மோதல்கள்
நடத்துவார்கள் தொழுகையில் நிற்கும் மற்ற சிறுவர்களை சீண்டிவிட்டு
ஓடிவிடுவார்கள் இதுபோன்ற குறும்பு செயல்களை செய்து
கொண்டுருப்பார்கள்.இன்னும் சில சிறுவர்கள் சாலையில்தனியாக
நின்றுகொண்டுருக்கும் கார்களை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுவார்கள். 
அப்படிதான் யான்புவில் என் உறவினருடைய நண்பர் ஒருவர்
தன்னுடைய காரை  இரவு தனது வீட்டிற்குமுன் நிறுத்திவிட்டு
சென்றிரிக்கிறார் .மறுநாள் காலையில் வேலைக்கு செல்வதற்காக காரை எடுக்க வீட்டிலிருந்து வெளியில்வந்து பார்த்தல் காரை காணவில்லை
என்ன செய்வது என்று புரியாமல் எனது உறவினருக்கு போன்செய்து
அவருடன் அவருடைய காரில் ஒவ்வொரு சாலையாக
தேடிச்சென்றுகிறார்கள்.இறுதியாக அந்தக்கார் ஒரு பாலைவன
வனாந்தாரத்தில் அனாதையாக பெட்ரோல் இல்லாமல் கிடந்திருக்கிறது(அதாவது அச்சிறுவர்கள் பெட்ரோல் இருக்கும் வரை வண்டியை ஓட்டிவிட்டு பெட்ரோல் முடிந்ததும் அங்கேயே விட்டுவிட்டு
சென்றிருக்கிறார்கள்) பிறகு வண்டிக்கு பெட்ரோல் ஊற்றி
எடுத்துவந்துள்ளனர்.அன்றுமுதல் அந்த காரின் உரிமையாளர் 
 காரின் ஷ்டீரிங்கிற்கும் பூட்டுபோட ஆரம்பித்துவிட்டார்.
________________________________________________________
ஒரு ரமலானில் கத்தரில் உள்ள அல்கோர் எனும் இடத்தில்
நோன்புதிறப்பதற்காக நண்பர்களுடன் இப்தார் கூடாரத்திற்கு   
சென்றிருந்தோம்.அன்று விநியோகிக்கப்படும் உணவு கொஞ்சம்
பற்றாக்குறை ஆனதாக ஒரு புரளியானது,அதை அறிந்த சில நோன்பு
திறக்க வந்திருந்த  வங்கதேசக்காரர்கள்(Bangali)தங்களுக்கு சாப்பாடு  கிடைக்காமல்
போய்விடும் என்று எண்ணி அங்கு விநியோகிக்கப்பட்டுகொண்டிருந்த
சாப்பாடு தாம்புலத்தை தங்களுக்கு வைக்க வேண்டி அத்தாம்பூலத்தை
பிடித்து தொங்கிய காட்சி சரியான நகைசுவையானது. 


குறிப்பு:-சம்பவம் படிப்பதற்காக சுவையேற்றப்பட்டுள்ளது.                   

11 comments:

Unknown said...

நல்லா எழுதியிருக்கீங்க காயலாங்கடை காதர்.. நிறைய விசயங்களத் தெரிஞ்சுக்க முடிஞ்சது.. வாழ்த்துக்கள்..

எம் அப்துல் காதர் said...

நிறைய விசயங்களை அழகாக சொல்கிறீர்கள் உங்க ப்ளாக்கை விட்டு அங்கே இங்கே போக மனசில்லை. நிறைய எழுதுங்கள் பாஸ். நாங்க இருக்கோம் படிக்கிறதுக்கு. வாழ்த்துக்கள்.

Unknown said...

காதர் பாய்,
வளைகுடா நாடுகளில் ரமலான் படித்தேன்.
நானும் 13 வருடமாக வளைகுடா நாட்டில் பணி புரிந்து கொண்டு இருப்தால்
இந்த ரமலான் மாதத்தை பற்றி நீங்கள் எழுதியதை ரசித்து படிக்க முடிந்தது.

மேலும், உங்கள் அனுபவத் துளிகளில் முதல் நிகழ்ச்சியாக ஒன்றை குறிப்பிட்டு
இதன் மூலம் அரபிகளின் கொடை பண்பு விளங்கியது என்று பதிந்து உள்ளீர்கள்.
மன்னிக்கவும். அந்த ஒரு நாள் உங்களுக்கு உணவு கொடுத்த அந்த நபர் நல்லவராக
இருந்து இருக்கலாம். இல்லையெனில், நீங்கள் ஒழுக்கமாக விரதம் இருப்பதால் அதை
பார்க்கும் ஆண்டவன், உங்களுக்கு ஒருவர் மூலம் உணவு தரும்படி பணித்து இருக்கலாம்.
இது தான் உண்மை.

அதை விட்டு விட்டு, இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் அரபியின் கொடை பண்பு
என்று பெரிய வார்த்தைகள் சொல்ல கூடாது. இதே அராபிய மண்ணில், எத்தனை கூலி
தொழிலாளிகளுக்கு எத்தனை விதமான கொடுமைகள். குறைவான கூலி வேலை பளு அதிகம்.
அந்த குறைவான கூலியையும் ஆறு மாதம், 10 மாதம் தராமல் இழுத்து அடிப்பது. வீட்டில் வேலைக்கு வரும் பெண்களை பாலியல் தொந்தரவு தருவது.
உதாரணத்திற்கு ரெண்டு மட்டும்.
இதுபோல் இன்னும் பல.
முழுவதும் நான் எழுதினால், ரெண்டு இல்ல எட்டு பதிவுகள் தேவை.

மேலும், தொழுகையில் இருக்கும் மற்ற சிறுவர்களை அடித்து விட்டு ஓடுவது
என்பது குறும்பல்ல. வளர்ப்பு சரி இல்லை என்பதே உண்மை. குவைத்தில்
1982 வாக்கில KTC(kuwait transport corporation) என்று இருக்கும் போது நிறைய
அரபி பிள்ளைகள் இது போல தான், ஓடும் பஸ்சுல கல் விட்டு அடித்து மனிதர்களுக்கும், பொருட்களுக்கும் சேதம் விளைவித்து கொண்டு இருந்தார்கள்.
இதை பார்த்த அரசாங்கம், பொது ஜனங்களிடம் பங்கு சேர்த்து
KPTC(kuwait public transport corporation) ஆக்கி விட்டார்கள்.
அப்புறம் என்ன, முதலில் கல் எறியும் போது "குழந்தைங்கள்" என்று பேசிய
அதே பெத்தவங்க, அப்புறம் தடுத்தாங்க. காரணம், எந்த பையன் கல் விட்டு
சேதம் பண்ணானோ, அவன பெத்தவன் கிட்ட பணம் வசூல் செய்தாங்க.
இப்போ புரியுதா? குறும்பா? இல்ல திமிரானு?

ரமதான் கரீம்.

Philosophy Prabhakaran said...

சலாம் அலெக்கும் பாய்... பதிவுலகிற்கு வரவேற்கிறேன்... தொடர்ந்து கலக்குங்கள்...

பொடுசு said...

போன வாரம் தோஹா சிட்டி சென்டரில் பார்த்த அரபியர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சி மிகவும் அருமை, அதுபற்றியும் வாசகர்களுக்கு தவறாமல் தெரிவிக்கவும் (முடிந்தால் இந்த வாரம் சில புகைப்படங்கள் எடுத்து வந்து தருகிறேன்)

Abdulcader said...

பாபு உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி.உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது.
-------------------------------------------------
அப்துல்காதர் உங்கள் வருகைக்கு நன்றி.
உங்கள் ஊக்குவித்தலுக்கு நன்றி பாஸ்.
-------------------------------------------------

Abdulcader said...

ஹரி அவர்களே! உங்கள் கருத்தின் மூலம் அரபிகள் கொடைவள்ளல்கள் இல்லை என்கிறீர்கள்.சரி நான் வேண்டும் ஆனால் கொடை தன்மை என்ற
வார்த்தையை எடுத்து விடுகிறேன் அதற்கு பதிலாக விருந்தோம்பல் என்று சேர்த்துக்கொள்கிறேன்.இதை அரபிகளுக்கு இல்லை என்றால் அது நீங்கள் கவனித்ததில் தவறு என்று தான் அருத்தம்.
ஏனென்றால் எனக்கு அவர்களுடைய விருந்துகளில் கலந்து கொண்ட அனுபவம் இருக்கிறது.
அவர்கள் சாப்பிடும் போது அங்கு யார் இருந்தாலும் அவர்களை சாப்பிடும்படி வற்புறுத்துவார்கள் அது சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் சரி.

சிறுவர்கள் தொழுகையில் மற்ற சிறுவர்களை தான் அடித்துவிட்டு ஓடுவார்கள் என்று குறிப்பிட்டுளேன்.அது அவர்களின் விளையாட்டு தான் தவிர நீங்கள் சொல்லுவதுபடி வளர்ப்பு பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் குவைத் செய்தி வேண்டுமானால் அவர்களின் பணத்திமிர்ரை காட்டுகிறது.இந்த செய்தியை முதல்முறையாக அறிகிறேன்.இதை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

Abdulcader said...

அலைக்கும் சலாம்,பிளாஷபி பிரபாகரன் அவர்களே!உங்களை கடைக்கு வரவேற்கிறேன்.

-------------------------------------------

பொடுசு அவர்களே!
போனவாரமே போட்டோ மட்டும் எடுத்திருந்தால் கண்டிப்பா ஒரு தனி பதிப்பே போட்டிருப்பேன்.இந்தவாரம் முயற்சி பண்ணுவோம்.

Unknown said...

காதர் பாய்,
கொடை பண்பு என்று இருந்ததை விருந்தோம்பல் என்று மாற்றியது சரிதான். அதை நான் அரபிகளுக்கு இல்லை என்று கூறவே இல்லையே! நீங்களாக ஒரு கருத்தை நினைத்து கொண்டு கமெண்ட்ஸ் எழுதி இருக்கிறீர்கள், வருந்துகிறேன்.

ஒரு குட்டி கதை.
அமெரிக்காவில் ஒரு நண்பர்கள் குழு இந்தியரை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு, இந்தியாவுக்கு தனித்தனியாக அவரவர்க்கு தோதான சமயத்தில் வந்தனர்.

முதலாமவன் விநாயகர் சதுர்த்தி நாளில் மும்பை வந்து இறங்கினான்.
அங்கே வடக்கத்தியர்கள், பிள்ளையார் பொம்மையின் முகத்துக்கு நேராக பணத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு அங்கே கூடி இருக்கும் மக்களை நோக்கி வீசி எறிவதை பார்த்து விட்டு, ஆஹா.. "இந்தியர்கள் கொடை வள்ளல்கள்" என்று குறிப்பு எடுத்துகொண்டு சென்று விட்டான்.

இரண்டாமவன், ஓணம் பண்டிகை அன்று கொச்சினுக்கு வந்து இறங்கினான்.
அங்கே கேரளா மக்கள் மதுக் கடை வாசலில் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தனர்.
(லேட்டஸ்ட் நியூஸ்:23.08.2010 ஓணம் அன்று கேரளாவில் ஒருநாள் மது பான விற்பனை 1 .52 கோடி) ௦இதை கண்ட அவன் " இந்தியர்கள் மிகபெரிய குடிகாரர்கள்" என்று குறிப்பு எடுத்து கொண்டு சென்று விட்டான்.

இப்படி ஒவ்வொருவனும், வேறு வேறு விதமாக அவர்கள் பார்த்ததை வைத்து குறிப்பு எடுத்து இந்தியர்கள் இப்படித் தான் என்று முடிவுக்கு வந்தால் எப்படி இருக்குமோ அது போல் தான் இருக்கு உங்கள் கருத்து. விருந்தோம்பலாமில்ல விருந்தோம்மல். 50வருஷத்துக்கு முன்னாடி எப்படி? 100 வருஷத்துக்கு முன்னாடி எப்படி? இன்னிக்கு பணம் இருக்கு எடுத்து விடறார். வரலாறு படிங்க சாமி வரலாறு.
நம்ம கிராமங்களில் ஏழை குடியானவன் வீட்டுக்கு விலாசம் தேடி வெயில் நேரத்துல போய், தண்ணி கேட்டா கூட மோர் கொடுப்பாங்களே அது தான் விருந்தோம்பல்.

சிறுவர்கள், மற்ற சிறுவர்களை அடித்து விட்டு ஓடுவது உங்களுக்கு விளையாட்டா? அதுவும் மஸ்ஜித் உள்ளே தொழுகைக்கு வந்த இடத்தில கோஷ்டி மோதல். இது விளையாட்டு.
இதை நீங்கள் நன்கு ஆராய்ந்து பதில் எழுதவும்.
நீங்களும் ஒரு குழந்தை வைத்து இருக்கிறீர்கள். அவன் வளர்ந்து இதை படிப்பான். எனவே, இன்னும் பக்குவம் தேவை.

(காயலாங்கடை காரரே, ambassador கார் joint கேட்டா, fiat கார் joint கொடுத்து ஏமாத்தகூடாது. தெரிஞ்ச ஆளாச்சேன்னு பார்கிறேன். இல்லனா அவ்ளோ தான் மவனே.............. இதுல வேற பார்த்து போடனுமாமில்ல...... போங்க தம்பி போங்க போங்க.. அண்ணன் ரொம்ப கோவமா இருக்கும்போது..... )

Jaleela Kamal said...

இந்த வருடம் இதே கதை தான் சாப்பாட்டு தாலவை சேருக்கு அடியில் ஒரு பாக்கிஸ்தானி ஒளித்து வைக்க
அதை பார்த்த அரபி டென்ஷன் ஆகி நேராக வந்து அதை எடுத்து பத்தாதவற்களுக்கு எடுத்து கொடுத்தாராம்

Abdulcader said...

jaleela kamal @........

ஹி ஹி ஹி........
இப்படிதான் நடக்கிறது.

உங்கள் வருகைக்கு நன்றி.

Post a Comment

எதாவது பார்த்து போட்டுட்டு போங்க.

Related Posts with Thumbnails