உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக........

Sunday 15 August 2010

சுதந்திர காற்று

ஒரு 70,80 வருடங்கள் பின்னோக்கி  சென்றுபாருங்கள் !!!

அந்தோ!!!!என்ன நடக்கிறது,தினம் தினம் வீதியில் கொடூரங்கள்........
வெள்ளையனே வெளியேறு  என்ற கோஷங்களுக்கு இடையில் ஆங்கிலேய
காவலர்களால் தாக்கப்பட்ட தியாகிகளின் மரண  ஓலங்கள்.சிறை எங்கும்
தியாகிகளின் கால்தடங்கள்.ஐயகோ!!வெள்ளையனுக்கு அடிமைகளாக நாம்.
                                                                                                                  உப்பு சத்யாகிரகம்
                                                                   முதல் சுதந்திரக்கொடி ஏற்றப்படுகிறது
முதல் சுதந்திர விழா
 மாவீரன் திப்புசுல்தானின் வீரதீர போராட்டத்தை பொறுக்கமுடியாத 
ஆங்கிலேயர் அவனை துக்கிலிட்டுவிட்டு  அவன் குடும்பம் முழுவதும் நாடு நாடுகடத்தபடுகிறார்கள் ,கட்டபொம்மனின் வெள்ளையன் எதிர்ப்பால் 
தூக்கில் இடப்படுகிறான் ,கிலபாத் இயக்கத்தவர்களும்  தூக்கில் இடப்படுகிறார்கள் ,ஜாலியன்வாலாபாக் படுகொலை நடக்கிறது,கேரளா
 மாப்பிள்ளைமார்களுக்கு   நாடுகடத்தல் மற்றும் தூக்கில் இடப்படுகிறார்கள்,
வேலூர் சிப்பாய் கலகத்தவர்களும்   தூக்கில் இடப்படுகிறார்கள்,உப்பு
சத்தியாகிரகம் நடத்தியவர்கள் மீது தாக்குதல்  நடத்தபடுகிறது,
வெள்ளையனுக்கு எதிராக கப்பல்கட்டிய வா.வு.சி.க்கு செக்கிழுக்கும்
தண்டனை கொடுக்கப்படுகிறது,இந்திய தேசிய ராணுவத்தை நடத்திய
நேதாஜி நாடுகடத்தபடுகிறார்,இப்படி  நீண்டுக்கொண்டு இருக்கிறது இந்த பட்டியல்..............

இதுபோல் எத்தனையோ தியாகத்திற்கு பின்...........எத்தனையோ கொடுமைகளுக்கு பின்........எத்தனையோ அவலங்களுக்கு பின்.........
சுதந்திரம் என்ற காற்றை நம்மை நுகரசெய்து விட்டு சென்றார்கள்
நம் தியாகிகள்.

70,80ஆண்டுகளுக்கு  பின் இன்று நாம் மகிழ்ச்சியாக உலாவருகிறோம் .
இன்று நமக்கு வாழ்வதற்கு  சுதந்திரம்,பேசுவதற்கு சுதந்திரம்,எழுத
சுதந்திரம் என்று இத்தனை சுதந்திரங்கள்.இத்தனையும் கொண்டு
நம் சுதந்திர நாட்டை காக்கின்றோமா?

இலஞ்சங்கள்,அரசியல்வாதிகளின் கொள்ளைகள்,வரி எய்ப்புக்கள்,
கொலைகள்,கொள்ளைகள் என நாம் பெற்ற சுதந்திரத்தை பேணமறந்தும்,
நம் முன்னோர்களின் தியாகத்தை மறந்தும் வாழ்ந்து வருகிறோம்.இந்த
நிலை  தொடருமானால் நம் வல்லரசு கனவு என்பது நம் பத்து
தலைமுறைக்கு பின்னாலும் கனவாகவேதான் தொடரும் என்பதில் 
சிறிதும் மாற்றம் இல்லை.எனவே இந்த 64 வது சுதந்திர தினத்தை
முன்னிட்டு நாம் நமக்குள்ளே சபதம் எடுத்துக்கொள்வோம்.

"என் தாய்நாட்டின் நலத்திற்காக உழைப்பேன்,
என் நாட்டு மக்கள் அனைவரையும் உயர்வு தாழ்வு பார்க்காமல் சமமாக
நடத்துவேன்,
இலஞ்ச லாவண்யத்தின் பக்கம் செல்லமாட்டேன்,
கொலை,கொள்ளை போன்ற நாச வேலைகளை செய்யமாட்டேன்"

                            தியாகத்தின் மீது வளர்ந்த சுதந்திரத்தை பேணி காப்போம்.

உங்கள் அனைவருக்கும் இனிய 64 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

                

4 comments:

பொடுசு said...

சுதந்திர தின வாழ்துக்கள் காதர் அவர்களே மேலும் உங்கள் பதிவை படிக்கும் இன்று போது என் பதிவில் கேட்டிருந்த எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு பதில் சொல்வது போல இருந்தது. சுருக்கமாகவும் அதே சமயத்தில் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லியமை மிக அருமை. வாழ்துக்களுடன் நன்றியும்.

Unknown said...

தேசப் பற்று நிறைந்த பதிவு வரவேற்கிறேன்.
எனது சுதந்திர தின வாழ்த்துக்கள்.

AKB said...

அப்துல்,

நாம் வாங்கிய சுதந்திரம் யாருக்காக ?இப்போ உள்ள அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் குடும்பதிற்கும் மட்டும், தினமலரில் ஒரு சின்ன செய்தி.Mp களுக்கு சம்பளம் கூட்ட ஏற்பாடு நடக்கிறது ,விளங்குமா இந்த நாடு ?

தினமலரில் ஒரு சின்ன செய்தி:
பார்லிமென்டிற்கு வெளியே நிருபர்களிடம் காங்கிரஸ் எம்.பி., ராஜிவ்சுக்லா கூறியதாவது: உலகிலேயே இந்தியாவின் தான் எம்.பி.,க்களின் சம்பளம் குறைவாக உள்ளது. அரசில் எழுத்தர் பணியில் உள்ளவர் பெறுவதை விட குறைவான சம்பளம் பெறுகின்றனர். செயலர்களுக்கு மேம்பட்டவர்கள் எம்.பி.,க்கள். அவர்களின் சம்பளத்திற்கும், எம்.பி.,க்களின் சம்பளத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பார்க்க வேண்டும். எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்துவது மிகவும் அவசியம். முன்னர் ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளம் பெற்ற அரசு செயலர் தற்போது 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். ஆனால், எம்.பி.,க்கள் சம்பளம் நான்காயிரத்தில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாகத்தான் உயர்த்தப்பட்டது. கவுரவமான சம்பளத்தை எம்.பி.,க்கள் எதிர்பார்க்கும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன். எம்.பி.,க்களின் பணி ஒன்றும் நிரந்தரமானதல்ல. இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார். இதேபோல், பா.ஜ., எம்.பி.,க்கள் சிலரும் எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்த வேண் டியது அவசியம் என, கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் இரு கட்சி எம்.பி.,க்களும் ஒன்றாகியுள்ளனர்.

பாலா

Abdulcader said...

பொடுசு அவர்களே!
வருகைக்கு நன்றி.
----------------------------------------------------
ஹரி அவர்களே!
வருகைக்கு நன்றி.
------------------------------------------------------
பஞ்ச பாலா அவர்களே!
வருகைக்கு நன்றி.
சரிதான் அரசியல்வாதிகளுக்கு சம்பளம் மட்டும் கூடுதலாக குடுத்தால் மட்டும் என்ன கொள்ளை அடிப்பதில்லிருந்து விலகவாபோகிறார்கள்.

Post a Comment

எதாவது பார்த்து போட்டுட்டு போங்க.

Related Posts with Thumbnails