அல்குர்ஆன்-73:2
ரமலான் மாதம் குர்ஆன் இறங்கிய மாதம் எனவே இந்த மாதத்தில்
முஸ்லிம்கள் குர்ஆனை அதிகம் அதிகம் ஓதுவது வழக்கம்.சிலர்
இம்மாதத்தில் ஒருமுறை குர்ஆனை ஓதிமுடிப்பார்கள்,சிலர்
இருமுறை,இன்னும் சிலர் பலமுறை என்று இம்மாதத்தில்
குர்ஆனை ஒதிவருவார்கள்.(நானெல்லாம் இதில் முதல்வகை
முட்டிமோதி ஒரு முறைதான் ) அவர்களுக்காக இந்த சிறிய பதிவு.
இதில் எப்படி குர்ஆனின் 30 பாகங்களின் பக்கத்தையும் எளிதில்
கண்டுபிடிப்பது என்பதை பற்றி பார்போம்.(இது மதினா அல்-முனவ்வரா
வெளியீடு Standard size குர்ஆனிற்கு மட்டுமே பொருந்தும்)
மதினா முனவ்வரா வெளியீடு குர்ஆன் |
நன்றாக கவனியுங்கள்.
திருக்குர் ஆனில் மொத்தம் 30 பாகம்(ஜுஷ்ஷுக்கள்) உள்ளது.
முதல் உதாரணம்.
உங்களுக்கு 5வது பாகத்தை குர்ஆனில் எடுக்க வேண்டும் என்றால்.
5வது பாகம் என்பதால் 5 இல் ஒன்றை கழிக்கவும் 5-1=4 கிடைக்கும்
அத்துடன் 2ஐ பெருக்கவும் 4x2=8 வரும்.அந்த 8ற்கு பின் 2ஐ
சேர்த்துக்கொள்ளுங்கள் 82.இப்பொழுது நீங்கள் குர்ஆனில் 82வது
பக்கத்தை எடுத்தால் அதில் உங்களுக்கு 5வது பாகம் கிடைக்கும்.
இரண்டாவது உதாரணம்
நமக்கு 10வது பாகத்திற்கு போகவேண்டும் என்றால்.10-1=9,பிறகு
அத்துடன் 2ஐ பெருக்க வேண்டும் 9x2=18,அடுத்து அத்துடன் 2ஐ
சேர்க்க வேண்டும் 182.இப்போது நீங்கள் குர்ஆனில் 182ஆம் பக்கத்திற்கு போனால் உங்களுக்கு 10வது பாகம் கிடைக்கும்.
இது போல் உங்களுக்கு தேவையான பாகத்தை இந்த கணக்கு படி
கண்டுபிடித்து சென்றால் நீங்கள் தேடும் பாகத்தின் பக்கத்தை எளிதில்
காணலாம்.
(குறிப்பு :-கிடைக்கும் ரிசல்ட்இல் உள்ள பக்கத்தில் ஆரம்பத்திலோ அல்லது
முடிவிலோ நமக்கு தேவையான பாகத்தின் தொடக்கத்தை காணலாம்)
6 comments:
ஹி ஹி... கணக்குல நான் ரொம்ப வீக்.
ரமலானில் இது எல்லோருக்கும் தேவையான பதிவு தான். அருமை! வாழ்த்துகள்!!
(கமண்ட் போடும் போது வரும் word verification ஐ நீக்கி விடுங்கள்)
இன்ட்லி தமிழ் மணத்தில் இன்னும் இணைக்கலையா?? அப்ப தான் நிறைய பேர் படிக்க வருவார்கள்.
பொடுசு
அப்புடியா! நீங்க நல்ல கணக்கு பண்ணுவீங்கன்னு நினைச்சேன்.
வருகைக்கு நன்றி.
எம்.அப்துல்காதர்.
உங்கள் வாழ்த்திற்கு நன்றி.உங்களுடைய கருத்து
மற்றும் நல்ல யோசனைகளுக்கும் நன்றிகள்.
நீங்க சொன்னபடி கமண்ட் verification ஐ நீக்கிவிட்டேன்.
இன்ட்லி மற்றும் தமிழ்மணத்திலும் இணைத்துவிட்டேன்.
Post a Comment
எதாவது பார்த்து போட்டுட்டு போங்க.