உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக........

Monday, 9 August 2010

கடை திறப்புவிழா

      கடை திறப்பு விழாவிற்கு வந்திருக்கும்அனைவரையும் வருக வருக என
வரவேற்கிறேன்.இனிப்பு  எடுத்துக்குங்க..........  


         நண்பர்களே!பல  கடைகளுக்கு  கஸ்டமரா மட்டுமே  இருந்து வந்த
எனக்கு திடீர்னு ஏன் நம்ம சொந்தகடை திறக்ககூடாதுன்னு  ஒரு எண்ணம்
வந்துச்சி.,இருந்தாலும் நம்ம மண்டைல அவ்வளவு சரக்கு ஒன்னும்
இல்லியே எதைகாட்டி கஸ்டமரை வளச்சிபோட முடுயுமுண்டு ஒரே
குழப்ப்ப்பமா இருந்துச்சி.அப்புறம் ஒரு வகையா மனசை தேத்திட்டு
கடையை விரிப்போமுண்டு துணிஞ்சி முதலை(பயப்படாதீங்க இந்த
முதலை கடிக்காது)போட்டுட்டேன்.ஏக இறைவன்தான் இதைஅபிவிருத்தி
ஆக்கி வைக்க வேண்டுமுண்டு பிரார்த்திக்கிறேன்.

     அப்புறம் என்னோட சொந்தஊரு தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்குற
காயல்பட்டினம் என்கிற(குக்கிராமம்முண்டு........ சொல்லுவேன்னு 
நினைக்காதிங்க அது) ஒரு நகராட்சி.எங்கஊர்காரனுக அதிகமான ஆள்கள்
பழைய இரும்புதொழிலை ஒரு காலத்துல பண்ணிக்கிட்டு இருந்ததாலதான்
 பழைய இரும்பு கடைகளுக்கு காயலாங்கடை...... காயலாங்கடைன்னு
பெயர்வந்ததா சொல்லப்படுது(ஆதாரம் எல்லாம்கேக்கக்கூடாது) .
அதனாலதான் என்னுடைய வலைபதிவிற்கு  காயலாங்கடைன்னு
பெயர் வச்சிட்டேன்.


       அதுக்காக நீங்க, எல்லாமே பழைய சரக்குதான் இங்க  இருக்குன்னு
 தப்பா எடை போட்டுறாதிங்க (ஏன்னா எடை போடுறது எங்க வேலை)
ஏதோ என்னோட தகுதிக்கு ஏண்ட அளவு சரக்கை போட்டு வியாபாரம்  தொடங்க இருக்கிறேன்.அதுக்கு இங்க வந்திக்கிற  எல்லோரும் உங்கள்
ஆதரவை தரும்மாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
(....ஹா அரசியல்வாதி அளவுக்கு போயுருச்சே!) அப்படியே
 பின்னுட்டள்ள ஒரு சொடுக்கு சொடுக்கி  கமாண்ட்ஸ் போட்டுட்டு
போகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.(இறைவன் நாடினால்) விரைவில்
நல்ல நல்ல சரக்கை இந்த கடையில் நீங்கள் எதிர்பார்க்கலாம்..... 
      
                                   

9 comments:

பொடுசு said...

என் கடைக்கு முதல் கஸ்டமரா வந்தீங்க அதனால உங்க கடைக்கு நான்தான் முதல் கஸ்டமரா வரணும்னு நினச்சேன் வந்துட்டேன். நல்லபடியா கல்லா கட்ட வாழ்த்துக்கள். ஆனா வியாபாரத்துல உங்ககூட போட்டி போடனுமேன்னு கொஞ்சம் பயமாயிருக்கு. காயல்"லாங்" கடையாக வளர மீண்டும் வாழ்த்துக்களுடன்.......

பொடுசு
(http://achalpuram-senthil.blogspot.com/)

ஹிஹிஹி எல்லாம் ஒரு விளம்பரம்தான் (இதாங்க வியாபார யுக்தி)

Unknown said...

hi guys good job i hope ur buisiness starting very colerfully.so kayalangadai need some kayal customers.i will do my level best.to increase the cusomers.thanx to invite me.hassan.

Anonymous said...

அன்புள்ள அப்துல்,

வாழ்த்துக்கள், கடைக்கு எப்போ வந்தோம் என்பது முக்கியம் இல்லை,எப்படி வந்தோம் என்பது தான் முக்கியம்,நீங்க இப்பதான் வழி காட்டி இருக்கிரிகல்,வந்துடோம் இல்ல,கிழி கிழி கிழுச்டுவோம்,இலாபம் இல்லா கடை எப்பவும் நல்லா ஓடும்,நாங்க இருக்கோம்,காயலன் கடைல தான் எல்லாம் கிடைக்கும்.உங்க நல்ல மனசுக்கு கடை பிச்சுகிட்டு ஓடும்,இலாபம் வந்தால் கொஞ்சம் அல்ஹோர்ல இட்லி வங்கி தாங்க,

வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,

பஞ்ச் பாலா.

Unknown said...

Edhaavathu puthusa podungappa,
Boradikkuthu.

Umasekhar.Ch

Unknown said...

வணக்கம் காதர் பாய்,

உங்க கடை திறப்பு விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி!
வாழ்த்துக்கள்!!
தங்கள் விருப்பம் போல தொண்டனாக
(followers-க்கு tamildict .com -ல அப்படி தான் போட்டிருக்கு)
ஆகி விட்டேன்.

ஒருவர் தேவையில்லை என ஒதுக்குவது
மற்றொருவருக்கு தேவை எனும் போது அணுகுமிடம்
"காயலாங்கடை".

பெயரை நல்ல தேர்ந்தெடுத்து இருகிறீங்க. good

மேலும், பழக்கடை, இனிப்பு கடை, உணவகம் போன்ற கடை உரிமையாளர்கள்
தான் புதுசா சரக்கு போட்டு வியாபாரம் செய்யணும். பொருட்கள் காலாவதி
ஆகும் முன் சரக்கை விற்று தீர்க்க வேண்டும். இல்லையேல் பல பிரச்சினைகள்.

ஆனால், நீங்கள் திறந்து இருப்பதோ "காயலாங்கடை".
பழைய இரும்பு, பித்தளை, செம்பு, அலுமினியம் போன்ற என்றும்
(recycle முறையில்) உதவும் உலோக, அலோகங்கள். உங்கள் பதிவுகளும்
அதுபோல இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
என்ன ஒண்ணு, காயலாங்கடை தொழிலில் திருட்டுப் பொருட்களை வாங்கி
வியாபாரம் செய்யக் கூடாது. (குறிப்பாக ரயில்வே இரும்பு) ஏனென்றால்
RPF ரொம்ப danger .
அதுபோல, தங்கள் பதிவுகளையும் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கேயும்,
RPF உண்டு. அவர்கள் உங்களை பிடித்து விடுவார்கள். இங்கே
RPF என்று குறிப்பிட்டது Regularaa padikira followers .

என்றும் அன்புடன்,
உங்கள் ஹரி.

Abdulcader said...

பொடுசு.....

நீங்கள் என்கடையை ரிப்பன் வெட்டி திறந்துவைத்ததற்கு மிகநன்றி.

நீங்க நகைசுவை உணர்வு அதிகள் உள்ளவர் .................. உங்களோடு

எல்லாம் என்னால் போட்டிபோட முடியாது.உங்களின்

வாழ்த்து மனநிறைவு அளிக்கிறது. அடிக்கடி கடைக்கு வந்துபோகவும்.

-------------------------------------------------

ஹசன் உங்களுடைய வருகைக்கு மிக நன்றி followerஆகவும் ஆகினால் மகிழ்ச்சி.

-------------------------------------------------

பஞ்ச் பாலா அவர்களுக்கு.,

உங்களின் பஞ்ச் வாழ்த்துக்களுக்கு நன்றி.எங்களை கிழிகிழின்னு கிழிக்க

முடியாது ஏன்னா இது பேப்பர் இல்லை இரும்பு?????????????????

இறைவன் நாடி கடை நல்ல ஓடினால் அல்கோர் தாத்தா கடை இட்லி இல்ல.,

தோஹா சரவணாபவன்ல புல்மீல்ஸ் வாங்கி தர்றேன்.

-------------------------------------------------
Dear Umaaaaaaaaa........

ungalukku tamil padikka theriyatha visayam ennakku eppathaan theriyum.sorry.......

athukku thaan naan photovum pottuk erukkiren.

------------------------------------------------

திரு.ஹரி அவர்களே.............

உங்கள் வருகைக்கு நன்றி.,

உங்கள் வாழ்த்து அருமையாக இருந்தது.RPF க்கு நீங்கள் கொடுத்த விரிவாக்கத்தை படித்து
விட்டு வயிறு குலுங்க சிரித்து விட்டேன்.
நாங்க RPF விட இறைவனுக்கு பயப்படுபவர்கள் எனவே அதுப்போல் வராமல் பார்த்துகொள்கிறேன்.

raj said...

தம்பி காதர்
வாழ்த்துகள், கடை வியாபாரம் எப்படி நடக்குது? காயல் என்றால் கடல்ஓரம், பட்டினம் என்றால் நகரம் என்று பொருள். கடை கடலோரத்தில் இருப்பதால் கடல் கடந்து உலகம் முழுவதும் வியாபாரம் நடக்க வாழ்த்துகள். நாட்டில் நல்ல வியாபாரம் காயலான் கடை தான். மறுசுழற்சி செய்வதால் மனிதகுலத்து நல்லது செய்கிறாய். மனமிருந்தால் அல்க்ஹோர் தாதா கடையும், தோஹா சரவணபவனும் ஒன்றுதான். வாடிக்கையாளர் வளர வாழ்த்துகள். பொடிசு, பஞ்ச் பாலா மற்றும் எல்லோரையும் வாழ்த்தும்

அண்ணன் அந்தோணி

Abdulcader said...

அந்தோனி சார் வருகைக்கு நன்றி.அடிக்கடி வந்து போகவும்.

அந்நியன் 2 said...

காதர் பாய் .

அஸ்ஸலாமு அலைக்கும்.
கடை எந்த ஊர்லே தொரந்திருக்கியே ? விலாசம் தரவும்.
வீட்லே பழைய இரும்புலாம் நிறையாக் கிடக்கு, எடைக்கு போடணும்.

Post a Comment

எதாவது பார்த்து போட்டுட்டு போங்க.

Related Posts with Thumbnails