உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக........

Tuesday, 28 September 2010

ஒரு இலவச சுற்றுபயணம்

 ஒரு பழமையான கடலோர நகரம் என்ற பதிப்பின் மூலம் நாம் 
காயல்பட்டனத்தின் ஆரம்ப வரலாறை பார்த்தோம்.இந்த பதிப்பில் 
உங்களுக்கு நான் காயல்பட்டனத்தை சுற்றி காண்பிக்கிறேன்.

இவ்வூர் பெரும்பான்மையாக இஸ்லாமிய மக்களை கொண்டது. 
மேலும் இவ்வூரை பற்றிய ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால், 
இங்கு காவல் நிலையம் கிடையாது, திரையரங்குகள் கிடையாது, 
டாஸ்மாக்குகள் கிடையாது.      

காயல்பட்டணம் உங்களை அன்போடு வரவேற்கிறது

 
மகாத்மா காந்தி நினைவு வளைவு
இது தான் காயல்பட்டனத்தின் நுழைவுவாயில். இது காந்தியின்
நினைவாக கட்டப்பட்டு ஒரு சுதந்திரதினத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இன்னும் இதைப்பற்றிய அதிகமான் தகவலை சேகரித்துக்கொண்டு
இருக்கிறேன். (இறைவன் நாடினால் விரைவில் பதியப்படும்)  

ஐக்கிய விளையாட்டு சங்கம்

இந்த ஐக்கிய விளையாட்டு சங்கம் 1955 ஆம் ஆண்டு முதல்
ஆரம்பமாகி நடந்து வருகிறது. 1974 ஆம் ஆண்டு முதல் இங்கு
தேசியஅளவில் "மௌலானா அபுல்கலாம் ஆசாத் கோப்பை"
கால்பந்து விளையாட்டு வருடா வருடம் சிறப்பாக நடந்து வருகிறது.
இது மட்டும் அல்லாமல் டென்னிஸ்,பேட்மிடேன்  போன்ற
விளையாட்டு மைதானமும் இதனுள் உள்ளது.

பேருந்து நிலையம்


காயல் மெடிக்கல் டிரஸ்ட்

இந்த காயல் மெடிக்கல் டிரஸ்ட் என்ற மருத்துவமனையானது 1990 ஆம்
ஆண்டு துவங்கப்பட்டு நல்ல முறையில் நடந்து வருகிறது.மேலும் இங்கு
ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சைகளும்,கட்டண சலுகைகளும்
செய்யப்பட்டு வருகிறது.

கடற்கரை பூங்கா
கடற்கரை

இந்த எழில்மிகு கடற்கரை எங்கள் ஊருக்கு இறைவன் கொடுத்த
அருட்கொடையாகும். மாலை நேரங்களில் கடற்கரை மணலில் அமர்ந்து
கொண்டு நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ பேசுவதற்கும்,அரட்டை
அடிப்பதற்கும். தனிமையில் அமர்ந்து சிந்திப்பதற்கும் மன மகிழ்ச்சியான
இடமாக விளங்கிவருகிறது. இந்த பறந்து விரிந்த கடற்கரை மணல்பரப்பு
மெரினாவை நினைவுபடுத்துவதாக இருக்கும். இதை நான் சொல்ல
வில்லை, ஒருமுறை ஊருக்கு வந்திருந்த முன்னால் முதல் அமைச்சர்
திரு.ராஜாஜி அவர்கள் இந்த கடற்கரையை பார்த்துவிட்டு சென்னை
மெரினாவிற்கு நிகராக இதுவும் இயற்கை அழகுடன் திகழ்வதாக
வர்ணித்துள்ளார்.

நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன் MLA நிதி மூலமாக இங்கு பூங்கா
கட்டப்பட்டு இந்த கடற்கரையை  சுற்றுல்லா கடற்கரையாக அரசு
மாற்றியது. அன்றுமுதல் இங்கு மற்ற ஊர்மக்களின் வருகையும் அதிக
மாகியது. மக்கள் அதிகமானதால் அவர்களின் கவனக்குறைவால் சில
இடங்கள் கூளமும், குப்பையுமாக   காட்சியளிக்கிறது. இந்த பிரச்சனை
யிளிருந்து கடற்கரையை பாதுகாப்பதற்காக சில மதங்களுக்கு முன்
ஊரில் உள்ள சிலர் ஒன்றிணைந்து காயல்பட்டனம் கடற்கரை
பயனாளிகள் சங்கம் (kayalpatanam beach user association) என்ற ஒரு சங்க
த்தை நிருவி கடற்கரையின் சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும் பாதுகாப்
பான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.       

பெரிய  குத்பா பள்ளி

இது ஊரில் கட்டப்பட்ட இரண்டாவது பள்ளியாகும், இது கி.பி 843 ஆம்
ஆண்டு காயல்படனத்திற்கு இரண்டாம் கட்டமாக குடியேறிய எகிப்தி
யர்களால்   கட்டப்பட்டு, கி.பி 1336 ஆம் ஆண்டு இங்கு மூன்றாம் கட்டமாக
குடியேறிய அரேபியர்களால்  புணர்நிர்மாணம் செய்யப்பட்டது.

நீங்கள் கீழ்காணும் பள்ளிகள் காயல்பட்டனத்து மற்ற பள்ளிகளாகும்.
இப்புகைபடத்தில் இல்லாத பள்ளிகளும் உள்ளது. முடிந்தால் அவை
களையும்   விரைவில் காணலாம்.

அப்பா பள்ளி
கொடிமர சிறு நைனார்   பள்ளி

    புது  பள்ளி

    மஹ்லரா    
  1.  
அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளி         
 
ஆறாம் பள்ளி
  
அஹமது நைனா பள்ளி

அருஸியா பள்ளி

இரட்டை குளத்து பள்ளி

கே.எம். டி. பள்ளி

காட்டும் மொஹுதூம் பள்ளி


கோமான் மொட்டையார் பள்ளி


குருவித்துறை பள்ளி


மரைக்கார் பள்ளி
 


செய்ஹுஹுசைன் பள்ளி


பிலால்  பள்ளி



தாயும் பள்ளி
இவைகள் மிக சில இடங்களே, இன்னும் அதிகமான இடங்கள்
காண்பதற்கு உள்ளது. மேலும் இங்குள்ள கலாச்சாரங்களில் சில
வித்தியாசமானதாகவும், வியப்பானதாகவும் காணலாம்.

உதாரணத்திற்கு: தெருக்களில் பெண்கள் செல்வதற்காக ஒவ்வொரு
வீட்டிற்கும் இடையிலும்  முடுக்குகள் (சந்துக்கள்) அமைத்திருக்கும்.
அடுத்து திருமணமான ஆண் பெண்வீட்டில் வாழும் ஒரு கலாச்சாரமும்
இங்குள்ளது. இவைகளும் விரைவில் பதியப்படும்.






3 comments:

பொடுசு said...

"இவ்வூரை பற்றிய ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால், இங்கு காவல் நிலையம் கிடையாது, திரையரங்குகள் கிடையாது, டாஸ்மாக்குகள் கிடையாது."

என்னாது??? டாஸ்மாக்ல சரக்கபோட்டுட்டு.... புல் போதைல தியேட்டர்ல சண்டயபோடுட்டு.... அதுக்காக போலிஸ் டேசன்ல குத்தவச்சி உக்காந்து பொங்கல் சாப்டர வசதி உங்க ஊர்ல இல்லியா!!! கடற்கரை.... சுத்தமா இருக்கும் அப்படி இப்படின்னு வேற சொல்றீங்க!!!

நல்லா மப்புல சாரி மேப்புல தேடி பாத்தீங்களா? உங்க ஊரு தமிழ்நாட்லதானே இருக்கு?

ஸாதிகா said...

அருமையான பகிர்வு.காயல் போக வேண்டுமென்ற என் நெடுநாள் ஆவல் ஓரளவு பூர்த்தியாகிவிட்டது.// இங்கு காவல் நிலையம் கிடையாது, திரையரங்குகள் கிடையாது, டாஸ்மாக்குகள் கிடையாது." //ஆசரியமான விஷயம் தான்.உங்கள் ஊரில் குற்றங்களே நிகழாதா?காவல்நிலையம் இல்லை என்கின்றீர்களே!!!எங்களூரைப்போல் தோற்றமளிக்கும் உங்களூர் சந்து பொந்துகளைன் படங்களை அடுத்த பதிவினில் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

Unknown said...

பார்த்துட்டேன் சாமி...!! பார்த்துட்டேன்?!!.
உங்க "நகராட்சிய" நல்லா பார்த்துட்டேன்!!!!?!!!.
ரொம்ப சந்தோஷம்!!!!!!!!!!!?.
நான் ஒன்னும் சொல்லல சாமி சொல்லல. அப்டியே continue ... pls.
(அப்போ "எந்திரன்" பார்க்க "தூத்துக்குடி" தானா?)

Post a Comment

எதாவது பார்த்து போட்டுட்டு போங்க.

Related Posts with Thumbnails