உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக........

Saturday, 2 October 2010

சுதந்திரம் தேடிக்கொடுத்த தேச பிதா

 நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 142 ஆம் பிறந்த நாளான இன்று, 
அவரை பற்றிய பதிப்பாக, எங்கள் ஊரில் காந்திஜி அவர்களின் நினைவாக
அமைக்கப்பட்டுள்ள தோரணவளைவை பற்றியும், அதில்எழுதப்பட்டுள்ள 
காந்திஜியின் பொன்மொழிகளையும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். 
 

மாகத்மா  காந்தி  நினைவு தோரனவளைவு

ஒரு குடியரசு தினத்தன்று இரவு காந்திஜி  நினைவு தோரணவாயில் 

நீங்கள் படத்தில் காணும் இந்த தோரணவளைவானது.மகாத்மாகாந்தியின்
நினைவாக காயல்பட்டணத்தில் உள்ள எல்.கே.எஸ். குடும்பத்தினரால் 
கட்டப்பட்டு ,  23-07-1956 இல் அன்றைய தமிழ் நாட்டின் முதலமைச்சராக 
இருந்த திரு.K.காமராஜர் அவர்களால் திறந்து   வைக்கப்பட்டது. அந்த 
தோரனவாயிலின் மேல் காந்திஜி அவர்களின் பொன்மொழிகள் 
பொறிக்கப்பட்டுள்ளது. அவைகளை   கீழே காணலாம்.

கடவுள் ஒருவனே என்று நான் நம்புகிறேன், அதனால் மனித சமூகம்
முழுவதுமே ஒன்றுதான் என்று நான் நம்புகிறேன். 

நான் தெய்வ நம்பிக்கை கொண்டவன். பிரார்த்தனை பண்ணுகிறவன்.
என்னைத் துண்டு துண்டாக வெட்டினாலும் கடவுள் இல்லை என்று
சொல்லாமல் கடவுள் இருக்கிறான் என்று சொல்லத்தக்க பலத்தை
எனக்கு அவன் கொடுப்பான்.

கிராமம் அழிந்தால் இந்தியா அழியும்.........

சத்தியத்தின் வழியில் தைரிய முள்ளவர்கள் செல்ல முடியும்,
கோழைகள் செல்ல முடியாது.

துவேஷம் ஒழித்தவனுக்கு ஆயுதமே தேவை இல்லை.

உலகில் அபின் உற்பத்தியைப்போல், ஆயுத உற்பத்தியையும் 
கட்டுப்படுத்த வேண்டும். உலகின் துன்பத்திற்கு அபினை விட 
ஆயுதமே பெருங்காரணமாக இருந்திருக்கிறது.

உலகத்திலுள்ள எல்லா சக்திகளையும் விட ஆத்ம சக்தியே பலம்
மிகுந்தது.அதை அழிக்கவோ அல்லது எதிர்த்து நிற்கவோ 
எவராலும் முடியாது.

தாய்நாடே நமது இலச்சியம் என்று வாழ்ந்தால்தான் நீங்களும் 
வாழ்ந்தவர்கலாவீர்கள்.

நோயால் சாகிரவர்களை விட பயத்தால் சாகிரவர்களின் 
எண்ணிக்கைஅதிகம். ஆதலின் பயத்தை விட்டொழியுங்கள்.

எளியவர்களை ஒடுக்கும் பாவத்தில் முழ்கியிருக்குமட்டும் நாம்
விலங்குகளை விட மேலானவர்களல்ல.

உழைப்பின்றி உன்கின்றவர்களை திருடர்கலேன்ருதான் அழைக்க
வேண்டும்.

எந்தவொரு வாலிபன் தன் திருமணத்திற்கு வரதட்சணை கொடுக்க
வேண்டுமென்று நிபந்தனை ஏற்படுத்துகிறானோ அவன், தான் கற்ற
கல்விக்கும், தன் நாட்டிற்குகும் இழுக்கு ஏற்படுத்துவதுடன், 
பெண்மைக்கு அவமானஞ் செய்தவனாகிறான்.

என் எதிரியைப் பாம்பு கடித்தால் அவனுடைய உயிரைக் காக்க அந்த
விஷத்தை நான் உறுஞ்சி எடுப்பேன்.

கடவுள் நம்முடைய கற்பனா சிருஷ்டி என்று சிலர் கருதுகிறார்கள்.
அவர்கள் கருத்து உண்மையென்றால் அப்புறம் உலகத்தில் 
எதுவுமே உண்மையன்று.

அதிகமாய் துன்பம் அனுபவிக்கக் கூடியவன் அதிகமாய்ச் சேவை 
செய்யக்கூடும்.

ஒருதலைச் சார்பு உடையவனும், கோபம் உள்ளவனும் 
உண்மையை ஒருநாளும் அறிய முடியாது.

நல்லவர்களும்,பரிசுத்தமானவர்களும் அடங்கிய கூட்டத்தையே 
நீங்கள் நாட வேண்டும். 

செய்திகள் உதவி - காஹிர் ஷேக்.  
காந்திஜீயின் குழந்தை பருவம்



 சிறுவர் பருவம்    

வாலிப பருவம்

தடியுடன் காந்திஜி


ராட்டு சுற்றும் காந்திஜி
  




7 comments:

emami said...

எழுத்து சரியாக தெரியவில்லை தீம்-ஐ மாற்றவும்

emami said...

இப்போ ok நல்லா தெரிகிறது

ஸாதிகா said...

நல்ல பகிர்வு.

Unknown said...

சாந்திய பத்தி சொன்னீங்க - இப்ப
காந்திய பத்தி சொல்லி இருக்கீங்க.
(சாந்தினு சொன்னது "மனசாந்தி")

கலக்குங்க........ கலக்குங்க
பதிவ போட்டு கலக்குங்க....

அரபுத்தமிழன் said...

//எழுத்து சரியாக தெரியவில்லை தீம்-ஐ மாற்றவும்
இப்போ ok நல்லா தெரிகிறது //

கருப்பு கலரோடு அலுவலகத்தில் படிக்கத் தயக்கமாயிருக்கு.
நீங்க உஜாலாவுக்கு மாறலாமே :)

பொடுசு said...

somthing is missing....

Jaleela Kamal said...

காந்தியின் புகைபடம் தேடி பிடித்து போட்டு இருக்க்கீங்க,இதெல்லாம் அரிய புகைப்படங்கள்
ரொம்ப நல்ல இருக்கு,

Post a Comment

எதாவது பார்த்து போட்டுட்டு போங்க.

Related Posts with Thumbnails