காயல்பட்டணத்தில் நவம்பர் 18 (ஹிஜ்ரி 1431,துல்ஹாஜ் பிறை11) கே.டி.எம்.தெரு சீதக்காதி நூலக வளாகத்தில் வைத்து வரலாற்று பொக்கிஷம் என்ற தனி பிரதி நூல் வெளிடப்பட்டது.இதன் தொகுப்பு ஆசிரியர் ஏ.எல்.எஸ்.என்ற லெப்பை சாஹிப் அவர்கள்.இந்நூலை ஏ.எல்.எஸ்.அவர்கள் மூன்று ஆண்டுகளாக அரும்பாடுபட்டு செய்திகளையும் ,அரிய புகைப்படங்களையும் சேகரித்து நூலாக வெளியிட்டுள்ளார்.
மூஸா ஹாஜி அவர்கள் நூலை வெளியிட S.T.கமால் அவர்கள் பெற்றுகொள்கிறார்கள்.அருகில் நூல் ஆசிரியர் ஏ.எல்.எஸ்.அவர்கள். |
இந்நூலின் ஆசிரியர் ஏ.எல்.எஸ். அவர்கள் E.அஹமது அவர்களுக்கு நூலில் உள்ள செய்திகளையும் புகைபடங்களையும் விளக்குகிறார்.(இடமிருந்து.S.T.கமால்,E.அஹ்மத்,S.H.நியாஸ்,மற்றும் A.L.S) |
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதி |
ஜப்பான் முஹம்மத் முகைதீன் பொன்னாடை போர்த்த A.L.S.அவர்கள் பெற்றுகொள்கிறார். |
இந்த வெளியீட்டு விழாவிற்கு தாயிம்பள்ளியுடைய செயலாளர் எம்.அஹமது அவர்கள் தலைமை வகித்தார்கள்,பள்ளியின் முன்னால் தலைவர் எஸ்.மூசா ஹாஜி அவர்கள் இந்நூலை வெளியிட,எஸ்.டி.கமால் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.வாழ்த்துரை A.R.தாஹா ஹாஜி வழங்கினார்கள்,நிகழ்ச்சி தொகுப்பு சீதக்காதி நூலகத்தின் பொருளாளர் S.H.நியாஸ் அவர்கள் நிகழ்த்தினார்கள்.நிகழ்ச்சி இறுதியில் ஜப்பான் முஹம்மது முகைதீன் அவர்கள் இந்நூலின் ஆசிரியர் ஏ.எல்.எஸ்.அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்கள்.இறுதியில் நன்றியுரையுடன் இவ் எளிய நிகழ்ச்சி நிறையுற்றது.
இறைவன் நாடினால் விரைவில் இந்நூலின் விமர்சனம் வெளியிடப்படும்.
6 comments:
"வரலாற்று பொக்கிஷம்" புத்தக வெளியீட்டுவிழா.
விளக்கவுரை அருமை சகோ..காயல் என்பது கடலுக்கு நிகரான பெரிய ஊர் என்று கேள்விப் பட்டிருக்கேன்.
இவ்விழாவிற்கு சொற்ப்ப நபர்கள் திறந்த வெளியில் கலந்திருப்பது வியப்பளிக்கிறது...!!!
இருந்தாலும் வாழ்த்துக்கள்.
முஹம்மது,வருசை முஹம்மது,ஒலி முஹம்மது,நெய்னா முஹம்மது,என்றப பெயரைக் கேள்விப் பட்டிருக்கேன் அது என்ன ஜப்பான் முஹம்மது ?
Mohamed Ayoub @........
//காயல் என்பது கடலுக்கு நிகரான பெரிய ஊர் என்று கேள்விப் பட்டிருக்கேன்.//
தவறாக தெரிந்துள்ளீர்கள் காயல்பட்டணம் ஒன்றும் நீங்கள் நினைப்பது போன்று(கடலளவு)பெரியது இல்லை.2002 சென்சஸ் படி 33000 மக்கள்தொகையை கொண்ட ஒரு சிறிய நகராட்சி அவ்வளவே.
//இவ்விழாவிற்கு சொற்ப்ப நபர்கள் திறந்த வெளியில் கலந்திருப்பது வியப்பளிக்கிறது...!!!//
இப்புத்தகமானது தாயிம்பள்ளி என்ற மஸ்ஜிதிற்கு உட்பட்ட இரண்டு தெருக்களுடைய முன்னோர்கள் பற்றிய செய்திகளும்,பள்ளி ஜமாஅத் முன்னால், இந்நாள் தலைவர்களை பற்றியதுமான தனிப்பிரதி. எனவேதான் இந்நிகழ்ச்சியில் இப்பள்ளியின் ஜமாத்தார்கள் மட்டும் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியை எளிமையாக நடத்தவே இதை நூலகத்திற்கு முன்பு நடத்தப்பட்டது.
//முஹம்மது,வருசை முஹம்மது,ஒலி முஹம்மது,நெய்னா முஹம்மது,என்றப பெயரைக் கேள்விப் பட்டிருக்கேன் அது என்ன ஜப்பான் முஹம்மது ?//
"ஜப்பான்" என்பது அவருடைய குடும்ப பட்டப்பெயர்.
ம்ம்ம்.. பரவாயில்லையே..!! நூல்வெளியீட்டு விழாவெல்லாம் தூள் தான்.
நூல் வெளியீட்டு விழா மகிழ்வைத்தந்தது.விரைவில் விமர்சனத்தைப்படிக்க ஆவலாக உள்ளோம்.
ஏன் எழுத மாட்டேங்கிறீங்க? வந்து எழுதுங்க boss!!
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
மிகவும், நிறைய காயல் பட்டினத்து தோழிகள் இருக்கிறாரக்ள். நூல் வெளியீட்டு பற்றி மிகவும் சந்தோஷ்ம,
Post a Comment
எதாவது பார்த்து போட்டுட்டு போங்க.