மனிதர்களில் உயர்ந்தோர்,தாழ்ந்தோர்,உயர்குலத்தோர்,இழிகுலத்தோர்,
உயர் ஜாதி,கீழ் ஜாதி என்று கற்பித்து பிரிந்தும்,பிழந்து,பிழவுபட்டுக்
கிடக்கும் இவ்வுலகில்,மனிதா!! உன்னில் உயர்ந்தவன்,தாழ்ந்தவன்
என்ற வித்தியாசம் ஒன்றும் இல்லை நீங்கள் அனைவரும் ஒரு தாய்
மக்கள் என்றுசொன்னது மட்டும் இல்லாமல் செயல்படுத்தியும் காட்டிக்
கொண்டு இருக்கும் மாநாடு;வெள்ளையர் கறுப்பரை விடவோ,கறுப்பர்
வெள்ளையரை விடவோ உயர்ந்தவர் இல்லை என்று முழங்கிய
மாநாடு;ஏழை,பணக்காரர் வித்தியாசம் பார்க்காத மாநாடு,அது தான்
சத்தமே இல்லாமல் நடந்த சர்வதேச மாநாடான புனித ஹஜ்.
மனிதர்களே!! நீங்கள் உங்கள் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்.அவன்
எத்தகையவன் என்றால்,அவன் தான் உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து
படைத்தான்,அதிலிருந்து அதற்கு துணையைப் படைத்தான்.இன்னும் அவ்
விருவரிலிருந்து அநேக ஆண்களையும்,பெண்களையும் பரவச்செய்தான்...
அல்-குர்ஆன்- 4 : 1
"மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே!உங்கள்
தந்தையும் ஒருவரே! இறையச்சம் கொண்டோரைத்தவிர,அரபிகள் அஜமி
(அரபியல்லாதார்) களை விட உயர்ந்தோருமல்ல.அதுபோல் அஜமிகள்
அரபிகளைவிட உயர்ந்தோரு மல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்த
வரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோரு
மல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்
கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர், குலத்திமிர் அனைத்தையும் இதோ
எனது காலில் போட்டு மிதிக்கிறேன்.)"
முஹம்மது நபி அவர்களின் இறுதி ஹஜ் சொற்பொழிவு.
நூல்- புஹாரி,முஸ்லிம்.
எத்தனையோ மதங்களும்,இசங்களும், மனிதர்களில் ஏற்றத் தாழ்வு
களில்லை என்று சொல்லத்தான் செய்கின்றன ஆனால் அவை செயல்
படுத்திக்காட்டுவதில் தோற்று விட்டன.ஆனால் சொல்லிலும்
செயலிலும் மேலோங்கி நிற்கும் இந்த இஸ்லாம் அச்சகோதரத்துவத்தை
செயல் படுத்திக்காட்டவே ஹஜ் என்னும் சர்வதேச மாநாட்டை
முஸ்லிம்களுக்கு ஐந்தாவது கடமையாக்கியது.
இந்த மாநாட்டில் மேற்கத்திய வெள்ளையரும்,ஆப்ரிக்க கருப்பரும்,
மங்கோலிய முகம்கொண்ட நாட்டவர்களும்,அழகில் உயர்ந்த
எகிப்தியர்களும் இன்னும் பல இனத்தவர்களும்,செல்வசீமான்களும்,
ஏழை எளியவர்களும் எந்தவித பாகுபாடுமில்லாமல் தைக்கப்படாத
இரண்டு வெண்ணிற உடைகளை அணிந்து
"லெப்பைக் அல்லாஹும்ம லெப்பைக்,லெப்பைக்
லாஷரீக்கலக லெப்பைக்,இன்னல்ஹம்த வன்னிஃமத
லகவல்முல்க் லாஷரிக்கலக்"
( நான் உன்னிடத்தில் ஆஜராகிவிட்டேன் ! யா அல்லாஹ் ! நான் ஆஜராகி
விட்டேன் .நான் வந்துவிட்டேன்.உனக்கு இணை துணை கிடையாது; நான்
(உன்னிடம்) வந்து விட்டேன்.யால்லாஹ்! உண்மையாக அனைத்து
அருட்பாக்கியமும்,புகழும் உனக்கே உரியவை.அனைத்துலகின் அதிபதியும்
நீயே ! உனக்கு இணை துணை யாருமில்லை.) என்று முழங்கி
இறைவனை கண்ணியப்படுத்துகிறார்கள்.
மாநாட்டு காட்சிகள் சில......
புகைப்பட உதவி :- அரப் நியூஸ்
4 comments:
Eid Mubarak. பதிவு அருமை, புது டெம்ப்லேட் நல்லா இருக்கு. தொடரட்டும்....
குர்ஆனின் வைரவரிகளுடன்,அழகிய படங்கள் கண்களையும்,கல்பையும் குளிர வைத்தன.பகிர்வுக்கு நன்றி.
பொடுசு... ...@
நன்றி.
ஸாதிகா........@
மாஷா அல்லாஹ் .................நன்றிகள்.
Post a Comment
எதாவது பார்த்து போட்டுட்டு போங்க.