உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக........

Monday, 15 November 2010

தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

என் இனிய தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்.
இந்த தியாகத் திருநாள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி
பொங்கிவழிய இறைவனை வேண்டுகிறேன்..............   


இந்தப்பதிப்பு வெறும் வாழ்த்துகளுடன் முடிவுறாமல்,இப்பெருநாளை பற்றிய 
சில நினைவுட்டல்களும் உங்கள் பார்வைக்கு.........
  • பெருநாள் தொழகையை திறந்த வெளிதிடல்களில் நிறைவேற்றுங்கள்.
  • ஹஜ் பெருநாள் தொழுகைக்கு சென்றுவிட்டு வந்தபின்பே நீங்கள் காலை 
       உணவை உண்ணுங்கள்.
      • பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு ஒரு வழியாகவும்,தொழுகை முடிந்து வரும்போது      மற்றொரு வழியாகவும் வாருங்கள்.
        • பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்பே நீங்கள் உங்கள் குர்பானி 
              பிராணியை இறைவனுக்காக பலியிடுங்கள்.
            • பெருநாளில்  உங்கள் உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் 
                         அனைவருக்கும் வாழ்த்துக்களையும்,இனிப்புக்களையும் பரிமாறிக் 
                         கொள்ளுங்கள். 
                  • பெருநாள் தக்பீரை துல்ஹஜ் 9 இரவு மக்ரிபிருக்கு பின் துவங்கி துல்ஹஜ் 12 அஸர் தொழுகை வரை ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் சொல்லுங்கள்.
                  • தக்பீர் இப்படி சொல்லுங்கள் அல்லாஹுஅக்பர், அல்லாஹுஅக்பர், அல்லாஹுஅக்பர், லாயிலாஹா இல்லல்லாஹு அல்லாஹுஅக்பர், அல்லாஹுஅக்பர் வலிள்ளஹில்ஹம்து.

                     

                  5 comments:

                  ஸாதிகா said...

                  அருமையான குறிப்புகளுடன் அழகிய வாழ்த்து!உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் ஈதுல் அல்ஹா நல்வாழ்த்துக்கள்.//பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு ஒரு வழியாகவும்,தொழுகை முடிந்து வரும்போது மற்றொரு வழியாகவும் வாருங்கள்// காரணம் அறிந்து கொள்ளலாமா?

                  அஸ்மா said...

                  பெருநாளின் நினைவூட்டல்கள் நன்றாக உள்ளது. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

                  அந்நியன் 2 said...

                  நல்லக் குறிப்பு, உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் காதர் பாய்..

                  Unknown said...

                  உங்களின் ஹஜ்ஜூப் பெருநாள் நினைவூட்டல் குறிப்புகள் நன்று

                  Abdulcader said...

                  ஸாதிகா.............@

                  //பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு ஒரு வழியாகவும்,தொழுகை முடிந்து வரும்போது மற்றொரு வழியாகவும் வாருங்கள்// காரணம் அறிந்து கொள்ளலாமா?//

                  நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழச்சென்றால் (செல்லும் போதும்,திரும்பும் போதும்)வெவ்வேறு வழிகளில் சென்று வருவார்கள்.

                  அறிவிப்பாளர் : ஜாபிர் (அலை) அவர்கள்.
                  நூல் : புகாரி./அபு தாவூத்.

                  Post a Comment

                  எதாவது பார்த்து போட்டுட்டு போங்க.

                  Related Posts with Thumbnails