உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக........

Wednesday 15 September 2010

கத்தார் டூ காயல்

ஸ்ஸ்ஸ்யப்பா............ ஒரு வழியாக ஊருக்கு வந்துவிட்டேன்.
ஜூன் மாசமே ஊருக்கு வரவேண்டியது.ஊருக்கு கிளம்புவதற்காக எல்லா
பொருள்களும் கட்டி தயார் பண்ணியாச்சி, விமானபயண சீட்டெல்லாம் 
கூட வந்திடிச்சி, ஊருக்குபோக மூன்றே நாள்கள்  இருக்கும் தருவாயில். 
திடீர்னு  மேனேஜர் வந்து "இன்னும் ஒரு மாதம் நான் விடுமுறையை
செல்லும் நாளை நீடிப்பு செய்துவிட்டதாக சொல்லிவிட்டார்.அப்புறம்
என்ன? சரி ஒரு மாசம் தானே என்று பழையபடி என்னுடைய மனசை தேற்றிக்கொண்டு பணிசெய்ய ஆரம்பித்து விட்டேன். ஆனா  ஊருல
இருந்து தங்ஸ் டெரர்ராகி போனில் என்னிடம் கன்னாபின்னான்னு 
திட்டிரிட்சி! (நல்லவேலை திட்டினது என்னையில்ல என் மேனஜரை!!).
மீண்டும் ஒரு மாசம் கழித்து விட்ட பின்னர் நான் ஊருக்கு கிளம்பும்
நேரத்துல பார்த்து என் டிபார்ட்மென்ட்  "தலை" ஊருக்கு அவசர வேலையா
போயிட்டதுனாலே திரும்பவும் ஒரு மாசம் இருக்க வேண்டியதா
போயிடுச்சி. இதுல காண்டாகி போன தங்ஸ் இதுக்கு  மேலே நீங்க ஊருக்கு
வர்றேன் போர்றேன்னு  சொல்லிக்கிட்டு போன் பண்ணா....இருக்குது உங்களுக்கு! என்று மிரட்டிடிச்சி. எப்போ நீங்க விமானநிலையத்திற்கு போயி போடிங்பாஸ் போட்டுட்டு போன் பண்ணுறீங்களோ அப்பத்தான் 
நீங்க ஊருக்கு வருவதா நம்புவேன்னு கடுப்பா சொல்லிடிச்சி. இப்படி ஒரு வழியா தட்டுதடுமாறி ஊருக்கு வந்து சேந்துட்டேன் (அப்போ இது
சரித்திரம் தானே.....அதான் எழுதுறேன்).

விமானநிலையம்
 ஊருக்கு  வருவது தாமதம் ஆனதாலே குழந்தையுக்கு வாங்கிய உடை
களையும், நோன்பிற்கு வேண்டிய திண்பண்ட வகைராக்களையும்
கார்கோவில் அனுப்பினேன்.அவ்வளவு சுறுசுறுப்பான கார்கோ(?) நான் 
ஊருக்கு வந்த பின்புதான் வந்து சேர்ந்தது. (இதுக்கு நான் கையிலேயே
கொண்டு வந்திருப்பேன்).

உள்குத்து.......
இந்த கார்கோ சேவை தமிழ் நாட்டுகாரர்களிடம் இருக்கும் வரை  இது
மாதிரியான பிரச்சனைகள் கிடையாது.ஆனால் இன்று நம்ம சேட்டன்
மார்கள் கார்கோ தொழிலை  அபேஸ் பண்ணிய பிறகுதான் இப்பிரச்சனை
களெல்லாம்.

இந்த முறை ஈத் பெருநாள் உலக முழுவதும்(எனக்கு தெரிந்தவரை) ஒரே
நாளில் வந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. முக்கியமாக எனக்கு, ஏன்னா  
நான் உலகத்தில் எங்கு முதல் பிறை தென்பட்டாலும் (ஆதாரபூர்வமான    
தகவல் கிடைக்கும் தருவாயில்) பெருநாள் கொண்டாடும் கொள்கையை
சரி என கண்டு செயல்படுத்துபவன். ஆனால் என் வீட்டில் தங்ஸ் மற்றும்
அம்மாவும் வட்டாரத்தில் பிறைகானப்பட்டால் தான் (தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத் கொள்கை ) பெருநாள் கொண்டாடுவார்கள். இந்தமுறை எல்லோ
ருக்கும் ஒரே நாளில் வந்ததால் எனக்கு பெருநாள் உணவு கிடைத்தது.
கடந்தவருடம் நான் ஒருநாள் முன்னால் பெருநாள் கொண்டாடினேன் 
அந்த நாள்  வீட்டில் தங்ஸ் மற்றும் அம்மாவும் நோன்பு வைத்திருந்த
தால் எனக்காக ஒன்றும் சமைக்கவில்லை. நான் அங்கு இங்கு அல்லாடி
கடைசியாக என்னுடைய அக்கா வீட்டிற்கு சென்று சாப்பிட வேண்டியதா
போயிடுச்சி ( நல்லவேலையா அவர்கள் என்னுடைய கொள்கையில்
உள்ளவர்களாக இருந்தார்கள்).

 பெருநாள் தொழுகை (காயல்பட்டனம் கடற்கரை) 
பெருநாள் சொற்பொழிவு (காயல்பட்டனம் கடற்கரை ) 
இந்தமுறை பெருநாளில் தங்ஸ்உடைய  டிபார்ட்மென்டிளிருந்து ஒரு சிறிய ரோலை செய்யலாமென்று துணிந்து இறங்கினேன் (அதாங்க
சமையல்). சகோதரி பாயிஷா காதருக்கு என் மனமார்ந்த நன்றிகளை
சொல்லிக்கொள்கிறேன். ஏனென்றால் என் இனிய இல்லத்தில் சகோதரி 
கொடுத்திருந்த சமையல் குறிப்பான அஹனிகறியை செய்து  தங்ஸ்இடம்
பாராட்டு பெற்றேன்.   
காயல்பட்டனம் கடற்கரை(பெருநாள் மாலை காட்சி)
              
இந்தமுறை பெருநாள் எல்லோருக்கும் சேர்ந்துவந்ததால் எங்கள் ஊர்
கடற்கரையில்  பெருநாள்தொழுகை கூட்டம் மிக சிறப்பாக இருந்தது.
பெருநாள் மாலையும் கடற்கரை கலைகட்டியது (காயல்படன  கடற்
கரையை பற்றி தனி பதிப்பு விரைவில் எதிர்பாருங்கள்).
     
ஊருக்கு வந்ததிலிருந்து சரியாக பதிப்புகள் போடுவதில்லை என்றும்,
ஈத் வாழ்த்து கூட போடவில்லை என்று திரு.ஹரி அவர்கள்
கமான்ட்சில்   கலாய்திருக்கிறார். தயவுசெய்து மன்னித்துக்கொள்ளவும்,
கொஞ்சம் பிஸி..(வேலையே இல்லாதவனுக்கு  நேரம் இல்லையாம்)
இனி இதுபோல் பதிவு போட  நேரம்கடத்தமாட்டேன்.பெருநாள் வாழ்த்து
தானங்கே சொல்லணும்........இதோ சொல்லிடுறேன்.
பெருநாள் வாழ்த்துக்கள்
 கடைக்கு  வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் என் இதயம்
கனிந்த "காலம் கடந்த" பெருநாள் வாழ்த்துக்கள்.
(இவ்வளவு காலதாமதமான வாழ்த்து சொன்ன ஒரே ஆளு நான்தான்னு
நினைக்கிறேன்).

15 comments:

Unknown said...

ஓஓஓஓஒ..... ஊருக்கு வந்தாச்சா......:-)
நம்ம ஊர் கடல்கரையின் தொழுகை போட்டோ ரொம்ப அழகாக இருக்கு...

அஹினி கறி செய்து தங்கையிடம் பாராட்டு வாங்கியதில் சந்தோஷமே....

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள்.

எம் அப்துல் காதர் said...

ஊருக்கு வந்தாச்சா?? சந்தோஷம். எல்லோருக்கும் என் சலாம் சொல்லுங்கள்.

Unknown said...

வந்துட்டார்யா....... வந்துட்டார்யா......

ஸாதிகா said...

பெருநாள் படங்கள் நன்றாக இருக்கின்றது

Unknown said...

காயலாங்கடை வியாபாரம் என்றால் பழைய பொருட்கள் விற்ப்பாங்கனு எல்லாருக்கும் தெரியும். ஆனால், ஈத் வாழ்த்தையே காலம் கடத்தி பழைய வாழ்த்தா கொடுத்த பெருமை உமை ஒருத்தரையே சாரும். (சரி அது போகட்டும் பாய், என்கிட்ட மட்டும் உண்மைய சொல்லுங்க, "அஹனிகறி" சமைக்கும்போது கைல நெருப்பு பட்டு தானே பதிப்பு போட தாமதம் ஆனது.)

Unknown said...

எதையுமே ப்ளான் பண்ணாம பண்ணக்கூடாது...............

பொடுசு said...

Master Next????

R-E-S-T!!!!

Abdulcader said...

சிநேகிதி @........

ஆமா!! ஊருக்கு வந்து பழையஆளா ஆயாச்சி.

இன்னும் உங்கள் மற்ற சமையல் குறிப்புகளையும் முயற்சி செய்துவருகிறேன்.

Abdulcader said...

ஹுசைனம்மா @..........

உங்கள் வருகைக்கும்,உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

Abdulcader said...

எம் அப்துல்காதர் @...........

வலைக்கும் ஸலாம், என் வீட்டில் உள்ளவர்களும் உங்களுக்கு ஸலாம் சொன்னார்கள்.

Abdulcader said...

ஹரி @..........

வந்துடம்லே....வந்துடம்லே....

லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொன்னம்லே.

//(சரி அது போகட்டும் பாய், என்கிட்ட மட்டும் உண்மைய சொல்லுங்க, "அஹனிகறி" சமைக்கும்போது கைல நெருப்பு பட்டு தானே பதிப்பு போட தாமதம் ஆனது.)//
உங்களுக்கு நல்ல கற்பனைவளம்.நல்ல வருவீங்க.

Abdulcader said...

ஸாதிகா @..............

வருகைக்கு நன்றி.

Abdulcader said...

பொடுசு @..........

Next............not R.E.S.T.
i will try to give B.E.S.T...

VaGaBOND said...

Abdul G.... kaalake erukenga... I like the way u wrote it....

Gud... Keep writing..

Post a Comment

எதாவது பார்த்து போட்டுட்டு போங்க.

Related Posts with Thumbnails