உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக........

Friday, 3 September 2010

டம்ளரை கீழே வைத்துவிட்டீர்களா?

இதற்கு முந்தியபதிப்பில்  நான் குறிப்பிட்ட இரண்டுவகையினரில்
முதலாவது வகையினர், இவர்கள் தங்களிடம்முள்ள கவலையால் சரியாக
எதையும் செய்யாது எப்பவுமே சோகமான முகத்துடனோ,கன்னத்தில் கைவைத்துக்கொண்டோ  இருப்பவர்களுக்காக இந்த சிறிய கதை .

இந்த கதை ஒரு நண்பர் அனுப்பிய மின்அஞ்சலின் தமிழாக்கம்.
இந்த சிறிய கதை,உங்களுக்கு மிக பெரிய நம்பிக்கையை  கொடுக்கலாம்.

ஒரு ஆசிரியர் தனது  வகுப்பறைக்கு ஒரு டம்ளர் தண்ணீருடன்
வருகிறார். அவர் அந்த வகுப்பு மாணவர்களிடம் அந்த டம்ளரை
காட்டி இது என்ன எடை இருக்கும் என்று கேட்கிறார்.

அதற்கு அந்த மாணவர்கள் 50 gms.....,100 gms.....,150 gms....,என்றும்
பல பதில்களை சொல்கிறார்கள்.

பிறகு அந்த ஆசிரியர் சொல்கிறார் எனக்கும் இதன் எடை தெரியாது
அதை நான் தூக்கும் வரை ஆனால் என் கேள்வி இதுவல்ல 
நான் இதை சில நிமிடங்கள் இப்படியே கையில் வைத்துக்கொண்டு
இருந்தால் என்னவாகும் என்கிறார்.

அதற்கு அங்குள்ள மாணவர்கள் ஒன்றும் ஆகாது என்கிறார்கள்.

அப்படி என்றால் இதை ஒரு மணிநேரத்திற்கு மேல் கையில்
வைத்துக்கொண்டு இருந்தால்...என்று ஆசிரியர் கேட்கிறார்.

அதற்கு அம்மாணவர்கள் உங்கள் கைவலிக்ககூடும்  என்கின்றனர்.

சரி இப்பொழுது நான் இதை நாள்  முழுவதும் இப்படியே வைத்துக்கொண்டு
இருந்தால் என்னவாகும் என்று ஆசிரியர் கேட்க.

அதற்கு ஒரு மாணவர் உங்கள் தோள்பட்டை வலி எடுக்ககூடும்,
உங்களுடைய கை தசை இறுக்கம் ஏற்படலாம்,பிறகு கையை முடக்கி
(பெரல்ய்சிஸ்)கூடவிடலாம்.அதனால் உடனே உங்களை
மருத்துவமனையில் சேர்க்க நேரும் என்று கூறுகின்றான்.

அதற்கு மற்ற மாணவர்கள் சிரிக்கின்றார்கள்.

ஆனால் ஆசிரியர் அந்த மாணவனை பார்த்து மிக சரியாக கூறினாய்
என்கிறார்.மீண்டும் அந்த ஆசிரியர் கேட்கிறார் இத்தனையும் நான் செய்த
பின்பு இந்த டம்ளர் தண்ணீரின்  எடையில் ஏதும் மாற்றம் ஏற்படுமா?

அதற்கு யாரும் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள்.

அப்புறம் ஏன் இந்த கைவலியும்,தசை இறுக்கத்தையும் தாங்கிக்கொண்டு 
இதை நான் பிடித்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று ஆசிரியர் கேட்கிறார்.

அதற்கு மாணவர்கள் ஏதும் புரியாதவர்களாக குழப்பமடைகிறார்கள்.

இந்த வலிகளில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும் என்று ஆசிரியர் கேட்கிறார்.

டம்ளரை நீங்கள் கீழே வைத்துவிடவேண்டும் என்று ஒரு மாணவன்
சொல்கிறான்.

மிகச்சரியாக சொன்னாய் என்று ஆசிரியர் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகிறார் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளும் இதை
போல்தான்.அதை சில நிமிடங்கள் தலையில்வைத்துவிட்டு
கீழேவைத்துவிட்டால் அவை சரியாக இருக்கும்.அதையே அதிகமான
நேரங்கள் வைத்து யோசித்து கொண்டும்,கவலைப்பட்டுக்கொண்டும்
இருந்தால் அதுவே நமக்கு வலியாகமாறும்.இன்னும் தொடர்ச்சியாக
வாழ்க்கை முழுவதும்  அதனை பிடித்துகொண்டுருந்தால் அது அவனுக்கு
பெரும் பாதிப்பை உண்டுபண்ணிவிடும்.அவனை அது முடக்கிவிடும். அவனால் வேறெதுவும் செய்யமுடியாது.

அவை எவ்வளவு  முக்கியமான பிரச்சனையாக  இருந்தாலும் சரியே!!
அவை எவ்வளவு சவாலான பிரச்சனையானாலும் சரியே!!நாம்
செய்யவேண்டியது அந்த நாளின் இறுதியில் தூங்குவதற்கு முன்னால்
நம்முடைய டம்ளரை (கவலைகளை)கீழே வைத்துவிட வேண்டும்.
இப்படி நீங்கள் செய்தால்   ஒவ்வொரு நாளும் நீங்கள் படுக்கையில்
இருந்து எழும்போது புத்துணர்வுடனும்,ஆரோக்யத்துடனும் எழுவீர்கள்.
எவ்வளவு பெரிய சவாலையும் எளிதாக எதிர்கொள்வீர்கள்.

"அதனால் இன்று முதல் உங்கள் அலுவலத்தைவிட்டு வெளியேறும் 
பொழுது உங்கள் டம்ளரை கீழேவைக்கமறந்து விடாதீர்."





16 comments:

VELU.G said...

நல்ல பதிவு

ஜெய்லானி said...

நல்ல சிந்தனை

பொடுசு said...

ஆஹா! கத்தார் டூ இந்தியா பறக்கும் போதே போட்ட பதிவா?
இல்ல...... ஊருக்கு போயும் உங்களுக்கு இவ்வளவு நேரம் கிடைக்குதுன்னா! நீங்க எம் அப்துல் காதர் போட்ட பதிவை (கிச்சனில் "தங்ஸ்கள்" படும்பாடு!! ) இன்னும் படிக்கலைன்னு நினைக்கிறேன். எது எப்படியோ பதிவு சூப்பர்.

Unknown said...

கரெக்டா சொன்னீங்க பாய்,
நீங்க சொன்ன இந்த மேட்டர், என் lifeல நெறைய முறை சந்திச்சு இருக்கேன் பாய்.

சரக்கு அடிக்க போனா, நான் பட்டுன்னு அடிச்சிட்டு டம்ப்ளர வச்சிடுவேன். நம்ம பசங்க சரக்கோட டம்ப்ளர கைல வச்சிகினு வள வளன்னு பேசிட்டே இருப்பானுங்க. அவனுங்க எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டனுங்க. சில நேரம் bar மூடுற நேரம் பையன் வந்து சொல்லும்போது தான் முடிப்பானுங்க.

கடைசி வரியில நீங்க சொன்னது போல தான், காலைல படுக்கைல இருந்து எழுந்திருக்கும் போது செம புத்துணர்ச்சி.
(பாய், இவ்ளோ விவரமா தெரிஞ்சு வச்சி இருக்கீங்க, உங்க brand என்னனு என்கிட்ட சொல்லவே இல்லையே. பாயம்மகிட்ட சொல்ல மாட்டேன் சும்மா சொல்லுங்க.)

எம் அப்துல் காதர் said...

நல்ல உதாரணத்துடன் கூடியப் பதிவு.

Unknown said...

சூப்பரா சொல்லியிருக்கீங்க.. நல்ல பதிவு..

ஸாதிகா said...

ஈத் முபாரக்!

Unknown said...

நல்ல பதிவு
ஈகை பெருநாள் நல் வாழ்த்துகள்!

Unknown said...

என்னையா பதிப்பாளர் நீங்களெல்லாம்? கத்தார்ல இருந்தவரை சரியா வாரத்துக்கு ஒரு பதிப்பு போட்டுகிட்டு இருந்தீங்க(வேலைல busya இருக்கும் போது). இப்ப வேலை முடிஞ்சு ஊர்ல போய் இருந்துகிட்டு, அதுவும் ரமதான் பண்டிகை அதுவும் தொண்டர்களுக்கும், தொடர்ந்து படிக்கும் மக்களுக்கும் ஒரு வாழ்த்து சொல்லிக்கூட உங்களால ஒரு பதிவு போடமுடியலையா?
(இதுல வேற வக்கணைய ஏதாவது பார்த்து போட்டு போங்கனு சொல்ல தெரியுது இல்ல)

Abdulcader said...

VELU.G @.......

உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

Abdulcader said...

ஜெய்லானி @........

உங்கள் வருகைக்கு நன்றி.

Abdulcader said...

பொடுசு @.......

நன்றி.....டிராப்டில் இருந்த செய்தி ஊர்வந்ததும் உடனே போட்டேன்.

Abdulcader said...

ஹரி @.....

ஹலோ....உங்களையெல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

Abdulcader said...

எம்.அப்துல்காதர் @......

வருகைக்கு நன்றி

பதிவுலகில் பாபு @.....

நன்றி.

Abdulcader said...

சகோதரி ஸாதிகா மற்றும் சிநேகிதியுக்கும் என் இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்.

Unknown said...

வணக்கம் பாய்,
வாங்க பாய்... நீங்க என்ன கைத்தொலைபேசியிலா பேசறீங்க.....
பின்னூடலுக்கு ஒரு பின்னூட்டல் தானே.. அதுக்கெதுக்கு "ஹலோ"........

யப்பா....நல்லா வேளை.....
பாய், ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுனு அளவை சொல்லிட்டீங்க.
அப்போ 1001 வது பெரியார் வந்தா திருத்திடமுடியுமில்ல......
ஐயா.... 1001 வது பெரியாரே எங்கையா இருக்கீரு?

Post a Comment

எதாவது பார்த்து போட்டுட்டு போங்க.

Related Posts with Thumbnails